சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணிகள் தொடக்கம்

கடந்த வெள்ளியன்று விநாயகர் சதூர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னை முழுவதும் 2,672 சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, அந்த சிலைகளை கரைக்கும் பணி இன்று முதல் தொடங்கியது. அதற்காக பட்டினம்பாக்கம், காசிமேடு, நீலாங்கரை, எண்ணூர் ஆகிய இடங்களில் சிலைகளை கரைக்க காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி சென்னையில் சிலைகளை கரைக்கும் பணி தொடங்கியது.
இன்று மொத்தமாக 850 சிலைகள் கரைக்கப்பட உள்ளன. ராட்சத கிரேன் மூலமாக சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தாங்கள் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளையும் நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
இதனையொட்டி பாதுகாப்பு பணியில் சென்னை முழுவதும் சுமார் 3,000 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இன்று தொடங்கும் இந்த சிலை கரைப்பு வரும் 31 மற்றும் செப்டம்பர் 3-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது.
படங்கள் - அசோக்குமார்