நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''மக்களவைத் தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களின் செயல்பாடு வரை தலைமைக்குத் தெரியும். 4000-க்கும் அதிகமான கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை குழுவிற்கு வந்துள்ளது. வரும் பிப்ரவரி 26 முதல் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் வீடு வீடாகச் செல்லும் பரப்புரை ஆரம்பிக்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு பல மாற்றங்களை திமுகவிலும், அரசிலும் எதிர்பார்க்கலாம்'' என தெரிவித்துள்ளார்.
Published on 23/02/2024 | Edited on 23/02/2024