Published on 02/04/2018 | Edited on 02/04/2018
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கப்போகிறது என்றும் சென்னை காவல்துறை ஆணையகத்தில் செயல்பட்டுவரும் கண்காணிப்பு அறைக்கு வந்த மர்ம நபரின் தொலைபேசி மிரட்டலை தொடர்ந்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் தேனாம்பட்டை மற்றும் கோபாலபுர இல்லத்தில் சோதனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, சோதனைக்கு பின் வெடிகுண்டு மிரட்டலாலானது பொய் என கண்டறிந்த போலீசார் மிரட்டல் விட்ட மர்மநபரின் மொபைல் எண்ணை வைத்து அந்த செய்தி பகிரப்பட்ட டவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தது எனவும் கண்டறிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.