Published on 22/05/2019 | Edited on 22/05/2019
நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதுதான் நாளை நடக்கும் என திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் நடத்தப்படும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,
மத்தியில் நாம் எதிர்பார்க்கும் ஆட்சி அமைவது உறுதி. ராகுல் காந்திதான் பிரதமராக வரப்போகிறார். மக்கள் கணிப்புதான் உண்மையான கணிப்பு கருத்துக் கணிப்புக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. அதேபோல் ஜனநாயக முறைப்படி தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் எனவும் அவர் உரையில் தெரிவித்தார்.