பாராளுமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளைக் கொண்டாடாமல் 40 தொகுதிகளையும் கழக உடன்பிறப்புகள் வெற்றிபெற்றுக் கொடுத்தால் அதை எனது பிறந்தநாள் பரிசாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி பிறந்தநாளை கொண்டாடவில்லை ஸ்டாலின்.
இருந்தாலும் அங்கங்கே உள்ள உடன்பிறப்புக்கள் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் முடிந்த அளவுக்கு ஏழைபாழைகளுக்கு உதவி செய்தும் வருகிறார்கள்.
அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியத்தில் இருக்கும் கீரனூர் குருகுலத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவுகளையும்,உடைகளையும் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கினார். அதைக்கண்டு குருகுலத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் பூரித்துப் போய் விட்டனர்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் இராஜாமணி, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் காதர்பாட்சா, வெங்கிடுசாமி, ஒன்றிய பொருளாளர் நாச்சிமுத்து , மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சின்னசாமி, கீரனூர் பேரூர் பொறுப்பாளர் கருப்புசாமி, கீரனூர் உறுமன், பெரிச்சிபாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சாமிதுரை, தும்பலப்பட்டி தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தண்டபாணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட கலை இலக்கியபகுத்தறிவு பேரவை அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிவேல், தொப்பம்பட்டி ஊராட்சி செயலாளர் ராமராஜ், மரிச்சிலம்பு ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன், மேல்கரைபட்டி ஊராட்சி செயலாளர் கருப்புச்சாமி, மிடாப்பாடி ஊராட்சி செயலாளர் ராமசாமி, புஷ்பத்தூர் ஊராட்சி செயலாளர் பொன்னுச்சாமி, தாளையூத்து ஊராட்சி செயலாளர் தங்கவேல், தும்பலப்பட்டி ஊராட்சி செயலாளர் கதிரேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார், ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் செல்வராஜ், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்லத்துரை, கீரனூர் பேரூர் மாணவரணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.