Published on 15/12/2020 | Edited on 15/12/2020

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல்பத்து உற்சவம் பக்தர்களின்றி தொடங்கியது.
ரங்கநாதர் கோயிலில் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நடைபெறும். திருவிழாவில் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 600 பேருக்கு மட்டுமே அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25- ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று காலை 04.45 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். கரோனா சூழல் காரணமாக டிசம்பர் 24- ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் டிசம்பர் 25- ஆம் தேதி காலை 08.00 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.