மணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் சார்பு கோயில் ஆகும். இந்த கோயிலில் வடக்கு வாசலில் உள்ள கோபுரத்தின் கட்டுமானப் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.
இந்த கோவிலின் பணியை கோவையை சேர்ந்த ஜெயபால், வேலுமணி ஆகியோர் செய்து வருகிறார்கள். இதனால் வடக்கு வாசல் அடைக்கப்பட்டுள்ளது. திருவல்லரை நேதாஜி நகர் சார்ந்த முருகன் மகன் பன்னீர்செல்வம், வடக்குவாசல் கோவில் கட்டுமானத்தில் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. கடந்த 15ஆம் தேதி பன்னீர்செல்வம் வடக்கு வாசல் பகுதியில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய பொது லைட் எரியவில்லை என்பதால் எலக்ட்ரிக்கல் ஆட்களை அழைத்து வந்து வேலை செய்து கொண்டு இருந்தார்.
அப்போது ஸ்ரீரங்கத்தை சார்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் காரில் வந்தார். கோவிலில் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் வடக்கு வாசல் வழியாக யாரும் செல்ல முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது என்று சொல்லியிருக்கார். அப்போது கையில் செல்போனில் எல்லாத்தையும் படம் எடுத்துக்கொண்ட ரெங்கராஜன் நரசிம்மன் தடுப்புகளை அகற்றிவிட்டு பன்னீர்செல்வம் தடுத்தும் அதை பொருட்படுத்தாமல் வடக்கு வாசல் வழியாக கோவிலுக்கு சென்று விட்டார்.
பின்னர் ரங்கராஜன் நரசிம்மன் மீண்டும் வடக்கு வாசல் வழியாக வெளியே செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்த பன்னீர்செல்வம் கோபுரம் கட்டுமான பணி நடப்பதால் பாதுகாப்பு கருதி இந்த வாசல் அடைக்கப்பட்டு இருப்பதாக அங்கிருந்து அறிவிப்புப் பலகையை காட்டியுள்ளார். மேலும் வெளியே செல்லக்கூடாது என்று தடுத்துள்ளார். நீ யாரு என்னை சொல்றதுக்கு உன் வர்ணம் என்ன ? என்று கேட்க பதிலுக்கு பன்னீர் செல்வம் வர்ணம் என்றால் என்ன ? என்று கேட்க, உடனே ஆத்திரத்தில் வர்ணம் என்றால் என்னவென்றே தெரியாத முட்டாளிடம் பேசிவிட்டேன் என்று சொல்லிக்கொண்டே சரி சரி.. உன் ஜாதி என்ன என்று கேட்க உடனே பன்னீர் செல்வம் என் ஜாதியை கேட்டு எனக்கு என்ன வேலைய தரப்போறீங்க என்று கேட்க உடனே டென்ஷன் ஆனா ரெங்கராஜ நரசிம்மன் நீ ஜாதிய சொல்லு உனக்கு வேலை தருகிறேன். அறங்கெட்ட துறையை விரட்ட வந்திருக்கும் ராமதூதன் என்று சொல்ல உடனே பன்னீர் செல்வம் அப்படியா சாமி ! தன்னுடைய ஜாதியை சொன்னவுடன்.. ரொம்ப நக்கலா இந்த ஜாதிக்கு எப்படி வேலை தரமுடியும். நீ தரங்ககெட்ட ஜாதியாச்சே!
நீயும் உன் முதலாளியும், இந்த ஜேசியும் சேர்ந்து உங்க இஷ்டத்திற்கு இந்த கோவிலை கட்டுறீங்க. நீங்க எல்லாம் ராஜினாமா செய்து விட்டு ஓடுங்கள், இல்ல நீதிமன்றத்தில் உங்களை ராஜினாமா செய்ய வைப்பேன்.
பைபில் விற்பனை எல்லாம் கோவில் நிர்வாகம் பார்க்க சொன்னால் எப்படி உருப்படும் என்று ஏக வசனத்தில் பேசிவிட்டு என்னையே தடுக்குறீயா நான் யார் என்று காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டாராம் இதன் பிறகு பன்னீர்செல்வம் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் மண்ணச்சநல்லூர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் ரெங்கராஜன் நரசிம்மன் மீது எஸ்சி எஸ்டி சட்டப்பிரிவின் கீழ் தீண்டாமை வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை நடந்து கொண்டு வருகிறது.
ரெங்கநாதன் நரசிம்மன் தமிழக கோவில்களில் ஊழல் நடைபெறுகிறது என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியவர் என்பது குறிப்பிடதக்கது. சமீபத்தில் திருவள்ளரை பெருமாள் கோவில் முறைகேடு நடைபெறகிறது என்று குற்றசாட்டு சொல்லியிருந்தார். அதே நேரத்தில் கோவில்களுக்குள் அத்துமீறி சென்று செல்போனில் படம் எடுக்க கூடாது என்று நீதிமன்றமே கண்டித்தது குறிப்பிடதக்கது.
இந்த பிரச்சனை குறித்து பன்னீர்செல்வத்திடம் பேச முயற்சி செய்த போது அவர் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளார் பேசும் மனநிலையில் இல்லை என்கிறார்கள். இந்த பிரச்சனை இத்தோடு முடியாது என்றும் பன்னீர்செல்வம் சார்பில் தலித் தலைவர்களிடம் இந்த பிரச்சனை கொண்டு சென்றுள்ளதால் தமிழக அரசுக்கு இது பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என்கிறார்கள்.