Skip to main content

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; ஒரே நாளில் 2 இடங்களில் மீனவர்கள் மீது தாக்குதல்!

Published on 29/08/2024 | Edited on 29/08/2024
Sri Lankan pirates beaten Tamil Nadu fishermen at 2 places on the same day
கோப்புப்படம்

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் தற்போது கோடியக்கரை மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோடியக்கரை தென் கிழக்கே 14 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களின் படகுகள் மூலம் மீனவர்களின் படை மோதி சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.3 லட்சம் மதிப்பிலான வலைகளை அறுத்து, வாக்கி டாக்கி, செல்போன், ஜி.பி.எஸ் கருவி உள்ளிட்ட பொருட்களையும் பறித்து சென்றிருக்கின்றனர். 

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி வருவதாகவும், கடந்த ஒரு மாதமாக கடற்கொள்ளையர்களின் தாக்குதல் அதிகமாகி இருப்பதாகவும் தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டு இடங்களில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 

சார்ந்த செய்திகள்