இரயில்வே தொழிலாளர்களுக்கான உத்தரவாதம் இல்லாத புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக மத்திய அரசை வலியுறுத்தி பொன்மலை ரயில்வே பணிமனை ஆர்மரிகேட் வாயில் முன்பாக எஸ்.ஆர். ஈ.எஸ் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் பொன்மலை எஸ்.ஆர். ஈ.எஸ் தொழிற்சங்க பணிமனை கோட்ட தலைவர் எல். பவுல் ரெக்ஸ் தலைமையில், துணைப்பொதுச்செயலாளர் எஸ்.ரகுபதி முன்னிலையில் நிர்வாகிகள் பாலமுருகன், ஆசைதம்பி, ஞானசேகர், கோரி முகமது, சாம்சன், செல்வகுமார், ஜோசப் சேகர்,மதன்குமார், சிதம்பரம், வெங்கட் நாராயணன், சீனிவாசன், சேசுராஜா, ஜார்ஜ் ஸ்டீபன், சுந்தர்ராஜன், சுந்தர் மற்றும் ஏராளமான இரயில்வே தொழிலாளர்கள், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், நிலுவையிலுள்ள 18 மாத பஞ்ச படியை உடனடியாக அரியர்ஸாக வழங்கிடவும், பணிமனைகளில் தனியார்மயம் கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.