நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் அமைதியான போராட்டம் வரவேற்கத்தக்கது- வைகோ
அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதா குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
மருத்துவப்படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த 90 சதவீதம் மாணவர்களின் எண்ணத்தை நம்பவைத்து கழுத்தை அறுத்தது மத்திய அரசு. நாடு முழுவதும் ஒரே கல்விக்கொள்ளை என்பது சாத்தியம் இல்லாதது.
அந்த அந்த மாநில கல்விக்கொள்கையில் படித்தவர்களுக்கு மருந்துவம் படிக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். மாணவர்களின் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. இது வரவேற்க்க தக்கது. நீட் தேர்விற்கு எதிராக மதிமுக போராட்டம் தொடரும்.
நீட் விலக்கு வரும் என்று மத்திய நம்பவைத்து கழுத்தை அறுத்தது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- எஸ்.பி.சேகர்