Skip to main content

நீட் தமிழகத்துக்கு தேவையில்லை: அமெரிக்காவில் மீண்டும் போராட்டம் அறிவிப்பு!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
நீட் தமிழகத்துக்கு தேவையில்லை:
அமெரிக்காவில் மீண்டும் போராட்டம் அறிவிப்பு!

அமெரிக்காவில் வரும் செப்டம்பர் 16, வாசிங்க்டன் டி.சி நகரத்திலும், ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 17 சிகாகோ, நியூயார்க், மற்றும் சான்பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களிலும் மறைந்த அனிதாவிற்காக நீதி கேட்டும், நீட் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதை வலியுறுத்தியும், கல்வியை முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும் அமெரிக்க வாழ் தமிழர்கள் இந்திய தூதரங்கள் முன் போராட்டம் நடத்த உள்ளனர்.

அதைத் தொடர்ந்து தூதரக மேலதிகாரிகளைக் கண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க உள்ளனர்.

இந்தப் போராட்டங்களைப் போலவே அமெரிக்காவின் மற்ற பகுதிகளில் மட்டுமல்லாது, உலகின் மற்ற நாடுகளிலும் வாழும் தமிழர்கள் இந்தியத் தூதரங்கள் முன் நீட்டிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தால் இந்தியாவின் மீது மிகப் பெரிய அழுத்தம் தரும் என்பதில் அய்யமில்லை.

ஆகவே, உலகத் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்று அமெரிக்க வாழ் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் போராட்ட நாள் இடம் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறும் இடங்கள்:


வாசிங்க்டன் டி.சி: செப்டம்பர் 16, சனிக்கிழமை, காலை 11:00 மணி
நியூயார்க்: செப்டம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை, காலை 11:00 மணி
சிகாகோ: செப்டம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை. காலை 11:00 மணி
சான்பிரான்சிஸ்கோ: செப்டம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை, மதியம் 02:00 மணி

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்