நீட் தேர்வுக்கு எதிராக திருவாரூரில் போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதா மரணத்துக்கு நீதிக்கோரியும் தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைமையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில் திருவாரூரில் நடந்த போராட்டத்தில், தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன. போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். என்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
-க.செல்வகுமார்