Skip to main content

தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி... மந்தையில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள்

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

Special event held at the church

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் சனிக்கிழமை புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் தேவாலயத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு மந்திரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் மந்தையில் இளைஞர்களை கண்டு விளையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. காளைகளை அடக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். இதில், இந்தப் பகுதியைச் சுற்றிய கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

 

இங்குள்ள பகுதியில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளைப் புத்தாண்டு தினத்தன்று இந்த ஆலயத்திற்கு அழைத்து வந்து அங்கு புனித நீர் தெளித்து மந்திரிக்கப்பட்டு, அவற்றுக்கு ஆலய பிரசாதமான பச்சரிசி, வெல்லம், கொண்டைக்கடலை, கம்பு, எள், பொட்டுக்கடலை ஆகியற்றின் கலவை அளிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் ஆலயத்திற்கு காலை முதல் வரத் தொடங்கியது. இந்நிலையில், ஆலயத்திற்கு மந்திரிக்க அழைத்து சென்று அங்கு வழிபாடு முடிந்த நிலையில் வெளியே வரும் காளைகள் பொதுமக்களின் கூட்டத்தையும், விசில் ஒலியையும் கண்டு மந்தையில் பொதுமக்களுடன் விளையாட தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Special event held at the church

 

இருப்பினும் காளைகள் மூக்கணாங்கயிறு இட்டு கட்டப்பட்டு வளர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. காளைகளை வரவேற்க அளிக்கப்பட்ட விசில் ஒலி காளைகளைக் குஷிப்படுத்தியதும் அவை துள்ளிக்குதித்து மக்களுடன் விளையாட தொடங்கியது அப்பகுதி முழுவதும் ஜல்லிக்கட்டு நடந்தது போன்ற பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்களும் காளைகளை அடக்குவதில் போட்டாபோட்டி போட்டு அடக்கினர்.

 

 

சார்ந்த செய்திகள்