தசரா பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டிணத்தில் நடைபெறவுள்ள தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று (03/10/2024) முதல் அக்டோபர் 16ஆம் தேதி (16/10/2024) வரை சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணத்திற்கும் தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக 13/10/2024 மற்றும் 16/10/2024 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் www.tnstc.in மற்றும் Instc official app என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து திரும்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்து வசதியினை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.