Skip to main content

சபாநாயகர் தனபால் தொகுதியான அவிநாசியில் இன்று கடையடைப்பு போராட்டம்!

Published on 25/01/2018 | Edited on 25/01/2018
சபாநாயகர் தனபால் தொகுதியான அவிநாசியில் இன்று கடையடைப்பு போராட்டம்! 

பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் சபாநாயகர் தனபால் தொகுதியான அவிநாசியில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சபாநாயகர் தனபால் தொகுதியான அவிநாசியில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பாக கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.  

இதை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் பேக்கரி, ஓட்டல், மளிகை கடை உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டுள்ளது.  அவிநாசி பகுதியை சேர்ந்த வணிகர்கள், ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழக அரசை கண்டிக்கும் விதமாகவும் இன்று நடைபெறும் கடையடைப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் விதமாகவும் தங்களது கடைகளை மூடியுள்ளனர்.  

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம் போல் இயங்கியது. தமிழகத்திலேயே பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சபாநாயகர் தொகுதியான அவிநாசியில்தான் முதன்முதலாக கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்