திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கடந்த காலங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து பயிர் இழப்பீடு குறித்தும் தங்களுடைய கிராமங்களை பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் தேவை குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
இதில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அதில் கடந்த 64 நாட்களாக தன்னுடைய வீட்டில் விவசாயிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு தொடர்ந்து காவல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் ஆகிய நாங்கள் டெல்லிக்குச் சென்று போராட ஏன் தடை விதிக்க வேண்டும்?
தங்களை வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றும் பாதுகாப்பிற்காக அமர்ந்திருக்கும் கூடிய காவல்துறையினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
அதேபோல் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களை அவ்வப்போது ஆக்கிரமிக்கும் வன விலங்குகளிடமிருந்து வனத்துறை தங்களை காப்பாற்ற வேண்டும். காட்டுப்பன்றியை வன விலங்குகள் பட்டியலில் இருந்து எடுக்க வேண்டும் என்றும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர்.