தமிழகத்தில் கோவை, நாமக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட ஆறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏழு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக இருந்த அந்தோனி செங்கல்பட்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் காலியாக இருந்த காஞ்சிபுர மாவட்டதிற்கு முதன்மை கல்வி அலுவலராக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை முதன்மை கல்வி அலுவலராக இருந்த சத்தியமூர்த்தியை தற்போது நியமனம் செய்துள்ளனர்.

அதேபோல திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தொடக்கல்வி துணை இயகுனராக இருந்த குணசேகரன் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலராக மாற்றம் செய்துள்ளனர். பழனியில் பணிபுரிந்த கருப்புசாமியை தென்காசிக்கு முதன்மை கல்வி அலுவலராக மாற்றியுள்ளனர்.
திருவண்ணாமலை டிஇஓ அருள் செல்வம் அதே மாவட்டத்திற்கு சிஇஓவாக பதவி உயர்வு பெற்றுள்ளார். கோயமுத்தூர் முதன்மை கல்வி அலுவலர் கீதா தர்மபுரி சிஇஓவாக மாற்றப்பட்டுள்ளார்.