Skip to main content

ஐந்து கிராம மக்களின் குடிநீர் தேவையை போக்கும் ஒற்றை கை பம்பு; வரிசைகட்டி நிற்கும் மக்கள் வேதனை

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பன்மடங்காக அதிகரித்துள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் மக்களை வாட்டியெடுத்துவருகிறது. தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்து ஆடத்துவங்கிவிட்டது.

 

village

 

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களும் குடிநீர் பிரச்சினையால் அல்லல்படுகின்றனர். மாநகராட்சி, நகராட்சிகளில் குடிநீர் லாரிகள் மூலம் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் உள்ளனர்.

 

ஆனால் கிராமபுறங்களோ உள்ளாட்சி அமைப்புகள் இல்லாமல்போனதால் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளையும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

 

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம்  வேப்பத்தாங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் மக்களை பெருத்த அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. ஊராட்சி முழுவதும் உள்ள மக்களின் குடிநீர் தேவையை ஒரே ஒரு அடிபம்பு மட்டுமே தீர்த்து வைக்கிறது. மற்ற இடங்களில் உள்ள கை பம்புகளை பரிமாறிக்க ஆளிள்ளாமல் பாழடைந்து கிடக்கிறது.

 

அதோடு வேப்பத்தாங்குடியை சுற்றியுள்ள கிராமங்களான வஞ்சியூர், படுவைக்காடு, மாவூர், வயலுர், பரமாக்குடி உள்ளிட்ட  கிராமங்களில் உள்ள இந்த ஒற்றை அடிபம்பை மட்டுமே நம்பி உள்ளனர்.

 

"சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் வசதி இல்லாததால் ஒரு குடம் தண்ணீர் எடுக்க 2 கிலோ மீட்டர் தூரம் போகவேண்டியிருக்கு. மேலும் சாலை வசதி இல்லாததால் தடுமாறி விழுந்து காயப்படுவதோடு, எடுத்து வரும் தண்ணீரும் கீழே கொட்டி விடுகிறது ". என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

 

 

" வேலைக்கு செல்லும் ஆண்களும், சிறுவர்களும், பெண்களும் என அனைவரும் ஒரு குடம் தண்ணீர்க்காக தங்கள் வேலையை விட்டுவிட்டு தண்ணீருக்காக அலைகின்றனர்.

 

 

ஐந்து கிராம மக்களின் தாகத்தை இந்த ஒற்றை அடிபம்பு தணித்தாலும், தற்போது கோடை மழையும் இல்லாமல் போனதும், வெயிலின் தாக்கமும் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவருகிறது. 

 

நாங்களாகவே போர் வசதிகள் செய்தாலும் நிலத்தடி நீர் உப்பாக இருக்கிறது, எங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்துவிட்டோம் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான ஒன்றான குடிநீர் தேவையை தமிழக அரசு பூர்த்திசெய்ய ஏற்பாடு செய்துதர வேண்டும். என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்