ஜன.8 ஆம் தேதியன்று கேரள-தமிழக பார்ட்ரின் சோதனைச் சாவடியில் இரவு வேளை பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது மாநிலத்தையே உலுக்கிய சம்பவம்.
சம்பத்திற்கு எந்த ஒரு தீவிர அமைப்புகளும் பொறுப்பேற்காத நிலையில் தொடர்புடைய குமரி மாவட்டத்தின் கோட்டார், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமத் மற்றும் தவுபீக் இருவரும் தப்பித்து வழியில் திருவனந்தபுரம் தம்பானூரில் கத்தியையும், பயன்படுத்தப்பட்ட 10 தோட்டாக்கள் லோடு செய்யப்படும் ரிவால்வரை எர்ணாகுளம் கழிவு ஒடையிலும் வீசி விட்டு செல்லும் போது கர்நாடகாவின் உடுப்பியில் அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள்.
விசாரணையின் போது மாவட்ட எஸ்.பியான ஸ்ரீநாத் தலைமையிலான எஸ்.ஐ.டி. பலவிதமான யுக்திகளைப் பயன்படுத்தினர். தாங்கள் இங்கே இந்தியன் யூனியன் லீக், என்றும், மற்றொரு சமயம் அல்-ஹந்த் அமைப்பின் கீழும் செயல்படுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இவர்கள் உண்மையான இயக்கத்தை மறைக்கிறார்களா?. போலீஸ் சந்தேகப்படும் ஐ.எஸ். அமைப்பை மறைப்பதற்காக நம்மை குழப்பி திசை திருப்புகிறார்களா என்று கணக்குப் போடுகிறார்கள்.
இது குறித்து நாம் எஸ்.பி.யான ஸ்ரீநாத்திடம் பேசியதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவலை் செல்லுகிறார்கள். அதனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இதன் மூலம் அந்த தீவிரவாத இயக்கத்தின் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடக் கூடாது. அனைத்து விஷயங்களையும் ஆராய்கிறோம் என்றார்.