கடலூர் மாவட்டம், சிதம்பரம் தெற்கு வீதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீனிவாசர் என்பவர், தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் சுடும் வடையை, வாடிக்கையாளர்கள் பலர் காத்திருந்து வாங்கிச் சென்றுள்ளனர். அப்போது, தள்ளுவண்டியில் ஆரம்பிக்கப்பட்ட அந்த கடை, இன்று சண்முக விலாஸ் என்ற பெயரில் ஸ்வீட் மற்றும் பேக்கரி வகைகள் விற்பனை செய்யும் பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.
இந்த கடையை நிறுவிய ஸ்ரீநினிவாசர், 6 கடந்த ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 4-ந்தேதி காலமானார். இவரது மறைவையொட்டி, அந்தக் கடையை நிர்வகிக்கும் அவரது மகன் பொறியாளர் கணேஷ், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 2-வது சனிக்கிழமைகளில் அவரது நினைவை போற்றும் வகையில் அந்த நாளை ‘வடை தினமாக’ அனுசரித்து பொதுமக்களுக்கு காலை 8 மணி முதல் மாலை வரை இலவசமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடையை வழங்கி வருகிறார்.
பார்சல் இல்லாமல், அந்த இடத்தில் ஒருவர் எத்தைனை வடை வேண்டுமானாலும் சாப்பிடலாம். மற்ற நாட்களில் இந்த வடை ரூ.8க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 6-ம் ஆண்டு நினைவு நாளில் இன்று (07-12-24) சனிக்கிழமையென்று கடையின் உரிமையாளர் கனேஷ் வடைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதனை சிதம்பரத்தில் உள்ள வணிகர் சங்கங்கள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் வரவேற்றனர்.