கடத்தப்பட்ட ஆடுகள் தன்னுடையதா.? என அடையாளம் காண்பிப்பதற்காக சென்ற ஆட்டுவியாபாரி ஒருவரை இருவர் சேர்ந்து குத்திக்கொலை செய்த சம்பவம் கீழக்கரையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Sheep trader murdered](http://image.nakkheeran.in/cdn/farfuture/iSDMI58EtDcRpC1_SimstXYrGQmWYogMnA9aTeGSMx0/1547207580/sites/default/files/inline-images/asdsdsdsdsdsdssd.jpg)
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுக்குடியினை சேர்ந்தவர் லுக்மான் ஹக். 32 வயதான இவர் கடந்த ஐந்து வருடங்களாக வெளிநாட்டில் வேலைப் பார்த்து வந்த நிலையில், சமீபத்தில் சொந்த ஊரான கீழக்கரைக்கு திரும்பி ஆட்டிறைச்சி வியாபாரம் செய்து வந்தார். இதற்காக ஆடுகளை மொத்தமாக விலைக்கு வாங்கி தன்னுடைய இடத்திலுள்ள கொட்டிலில் அடைத்து வளர்த்து வந்திருக்கின்றார். இங்கிருந்த இவரது ஆடுகள் அடிக்கடி திருடுப் போன நிலையில், இதனை செய்தது ஆட்டோ டிரைவரான கச்சி மரிக்கா எனும் இம்ரான்கானே எனத் தகவல் தெரிய, ஆட்டினைத் தேடி சென்றிருக்கின்றார்.
ஒருக்கட்டத்தில் கச்சி மரிக்காவிற்கும், லுக்மான் ஹக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், " உன்னுடைய ஆடு என்கிறாயே வந்து ஆட்டை அடையாளம் காட்டு.!" என்றிருக்கின்றனர். இவரும் ஆட்டினை அடையாளம் காட்டி மீட்கச் செல்லும் போது ஜாமியா பள்ளிவாசல் பகுதியில் கச்சி மரிக்கா மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் ஆட்டுவியாபாரியைக் குத்திக் கொன்றிருக்கின்றனர். சம்பவ இடத்திலேயே பலியானதால் கச்சி மரிக்கா எனும் இம்ரான்கான் தங்களிடம் சரணடைந்துள்ளதாகவும், மற்ற இருவரைத் தேடிவருவதாகவும் தெரிவிக்கின்றது கீழக்கரைக் காவல்துறை.
தஞ்சையை சேர்ந்த கச்சி மரிக்கா, கீழக்கரை பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட முறை சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.