வாணியம்பாடியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சாரதிக்குமார் என்பவரின் மனைவி சென்னை போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ''வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதிக்குமாரின் மனைவி நான். என்னுடைய பெயர் ரம்யா. நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் அவருக்கு வேறொருவரிடம் தொடர்பு இருந்திருக்கிறது. அது எனக்கு தெரியவே தெரியாது. அந்த அம்மா எனது கணவரைவிட 14 வயது மூத்தவர். அவரை அக்கா, அக்கா என்று எனது கணவர் அழைத்து வந்ததால் தவறாக நான் நினைக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல்தான் அக்கா முறை இல்லை, வேறு மாதிரியான ரிலேஷன்சிப் இருக்கிறது என்று எனக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக எனது கணவரிடம் கேட்கும்போது, தவறாக ஒன்றும் நடக்கவில்லை என்று கூறிவந்தார்.
அந்த அம்மா எப்படி என்றால், அவர் வீட்டுக்கு வந்துவிடுவார் இல்லையென்றால் அவரது வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போய்விடுவார். படுப்பது கூட பார்த்தீர்கள் என்றால், எனது கணவர் நடுவில் படுத்தால், நான் இந்தப் பக்கம் படுக்கணும், அந்த அம்மா அந்தப் பக்கம் படுக்கணும். அவர்கள் இரண்டு பேரும் கட்டிப்பிடித்து படுப்பார்கள். அதனை கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீ தான் தப்பா நினைக்கிற என்பார்கள். அடிப்பார்கள். ஒரு படத்திற்கு போனால்கூட நடுவில் எனது கணவர் இருப்பார். இந்தப் பக்கம் நான் இருப்பேன். அந்தப் பக்கம் அந்த அம்மா இருப்பார். இதைக்கேட்டால் மிரட்டுவார்கள்.
இந்த நேரத்தில்தான் எனக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். அதற்கு பிறகு அந்த அம்மா அவரது அக்கா மகளை, 18 வயதே ஆன அவரது அக்கா மகளை கோயம்பத்தூருக்கு அழைத்துச் சென்று ரூம் போட்டு அட்வைஸ் செய்திருக்கிறார். அவனை சந்தோஷமா பாத்துக்கோ, எப்படி அவனை பாத்துக்கணும் என அட்வைஸ் பண்ணியிருக்காங்க. இதெல்லாம் எனக்கு தெரிஞ்சப் பின்னர் என்னை மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
எனக்கும், எனது குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக கட்சி மேலிடத்திலும் சொல்லியிருக்கேன். நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதை எப்படியோ தெரிந்து கொண்டு என்னை மிரட்டினார்கள். அதனால்தான் உரிய நடவடிக்கை எடுக்கணும் என்று கமிசனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன் என்றார்.
கேள்வி : ஏற்கனவே புகார் கொடுத்திருக்கிறீர்களா?
பதில் : புகார் கொடுத்திருக்கிறோம். அவர் கட்சிப் பொறுப்பில் உள்ளால் நடவடிக்கை எடுக்கவில்லை.
கேள்வி : கட்சித் தலைவரிடம் புகார் கொடுத்திருக்கிறீர்களா?
பதில் : சமீபத்தில்தான் கொடுத்தோம். நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதற்குள் இவர்கள் தலைமை வரை போவதற்கு உனக்கு தைரியம் வந்துவிட்டதா என்று மிரட்டுகிறார்கள்.
கேள்வி : அந்த பெண்ணின் சகோதரர் எஸ்.பி.யாக இருப்பதாக சொல்கிறார்களே?
பதில் : ஆமாம். அவரிடமும் சொன்னோம். அவரும் இரண்டு பேரிடமும் பேசிப் பார்த்தார். கண்டித்துப் பார்த்தார். ஆனால் அவர்கள் இருவரும் கேட்கவில்லை. அதற்குப் பிறகு உன்னையும், உன் குழந்தையையும் காப்பாற்றிக்கொள் என கூறிவிட்டார்.
கேள்வி : அவர் எங்கு எஸ்.பி.யாக இருக்கிறார்?
பதில் : அவர் சி.எம். செல்லில்தான் இருக்கிறார்.
கேள்வி : என்ன சொல்லி மிரட்டுகிறார்?
பதில் : கல்யாணம் பண்ணும்போது 130 சவரன் நகை போட்டாங்க. அந்த நகைகளை எல்லாம் வைத்துவிட்டார்கள். அதனுடைய காசெல்லாம் அந்த அம்மாவிடம் தான் இருக்கிறது. எங்க வீட்டுல காசு கொடுத்தாங்கன்னா, அதை அப்படியே கொண்டுபோய் அந்த அம்மாகிட்ட கொடுத்துவிடுவார். என்னை யாரும் எதுவும் பண்ண முடியாது என்று மிரட்டுவார். அவர்கள் பேசிய ஆடியோ வைத்திருக்கிறேன். அப்படி ஆபாசமாக பேசுவார்கள். இதைவிட்டு வெளியே போனால் எனக்கும், எனது குழந்தைக்கும் பாதுகாப்பு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த ஆடியோவை கேட்டீர்கள் என்றால் தெரியும். என்னிடம் அவ்வளவு ஆதாரம் இருக்கிறது. ஆனால் அவர் பொறுப்பில் இருப்பதால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.