நீட் தேர்வுக்கு எதிரான போராடிய மாணவிக்கு சம்மன்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம், பேரணி நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகிறது. சென்னையில் சில தினங்களுக்கு முன்பு பாரதி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளும் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிராக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாரதி மகளிர் கல்லூரி மாணவிகளை வற்புறுத்தியதாக பிராட்வேயைச் சேர்ந்த கல்லூரி மாணவி மஞ்சுளா என்பவருக்கு முத்தையால்பேட்டை காவல்துறை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
ஜீவா பாரதி