விசாரணைக்கு சசிகலா ஆஜராவார்: ஆறுமுகசாமி பேட்டி
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக சசிகலாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சசிகலா ஆஜாராவார் எனவும் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய அதிகாரி ஆறுமுகசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு சசிகலா ஆஜராவார். இதுதொடர்பாக வழக்கறிஞர் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எப்போது சசிகலா ஆஜராவார் என்பது நாளை (திங்கள்கிழமை) நீதிமன்றம் செல்லும் போது தான் தெரியுமெனவும் அவர் கூறினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 15 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாகவாம், இன்னும் நிறைய பேரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும் ஆறுமுகசாமி தெரிவித்தார்.
அருள்