சசிகலா புகைப்படத்தின் மீது
மாட்டு சாணியை வீசிய மர்மநபர்கள்!
அ.தி.மு.க வில் டிடிவி, ஒபிஎஸ், இபிஎஸ் என மூன்று அணிகளாக இருந்து வந்த நிலையில் ஒபிஎஸ் இபிஎஸ் இணைந்ததால் தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
இதில் குமரி மாவட்டத்தில் மாஜிக்களான தளவாய்சுந்தரம், பச்சைமால், எக்ஸ் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மற்றும் காரவிளை செல்வம் போன்ற முக்கிய நிர்வாகிகள் டிடிவி அணியில் இருப்பதால் இங்குள்ள பெரும்பான்மையான தொண்டா்களும் டிடிவி அணியில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் மாவட்ட அதிமுக அலுவலகம் நாகா்கோவில் வெள்ளாளா் காலணியில் இருக்கிறது. இன்று அந்த அலுவலகத்தில் நுழைந்த மா்ம நபா்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்ததோடு அலுவலக பலகையில் இருந்த சசிகலா புகைப்படத்தின் மீது மாட்டு சாணியையும் வீசிவிட்டு அந்த நபா்கள் தப்பி சென்றனா்.
இதையடுத்து அங்கு வந்த டிடிவி ஆதரவாளா்கள் சசிகலா புகைப்படத்தின் மீது இருந்த சாணியை கமுவினார்கள். இச்சம்பவம் அதிமுகவினா் மத்தியில் பரபரப்பை ஏற்படு்த்தியது.
- மணிகண்டன்