தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது. இந்நிலையில், இன்று (06.09.2021) காலை அவை தொடங்கியதும் பெரியார பிறந்தநாளை முன்னிட்டு சில அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். இதுதொடர்பாக பேசிய அவர், "பெரியார் என்ற ஒற்றை நபரால்தான் தமிழகம் சுய சிந்தனை பெற்றது. 95 வயதுவரை மூத்திர சட்டியை தூக்கிக்கொண்டு போராட்டம் நடத்தியவர் தந்தை பெரியார். அவரின் போராட்டங்கள் யாரும் காப்பி அடிக்க முடியாதவை. அவரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்" என்றார்.
இதனை வரவேற்று பேசிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம், "சாமானியனும் அரசியலுக்கு வரலாம் என்று அடித்தளம் இட்டவர் பெரியார். எனவே முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறோம்" என்றார். தொடர்ந்து பேசிய பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், "கடவுள் நம்பிக்கை இருக்கும் கட்சியான பாஜகவும், பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடுவதை வரவேற்கிறது" என்றார்.