
அதிமுக முன்னாள் அமைச்சரும், அமமுக அமைப்பு செயலாளருமான செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். அவர் திமுகவில் இணைந்ததை கரூர் மாவட்ட திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். கரூர் மாநகர் முழுவதும் பேனர்கள் வைத்து அசத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்டம் முழுவதும் அவரை வரவேற்று ஏராளமான திமுக நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டினர். சென்னையில் கலைஞர் சிலை திறப்பு விழா முடிந்ததும் கரூர் வரும் அவரை வரவேற்க தயார் நிலையில் இருக்கிறார்கள்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், செந்தில்பாலாஜியிடம் வரும் 27ம் தேதி கரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு தேதி கொடுத்திக்கிறார். அந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைகின்றனர். இதில் சில தகுதி நீக்க எம்.எல்.எக்கள் கலந்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
கலைஞர் சிலை திறப்பு விழா முடிந்தவுடன் பொதுக்கூட்டத்திற்கான அறிவிப்பு முறைப்படி வரும் என்கிறார்கள்.