Skip to main content

ஓபிஎஸ்க்கு செங்கோட்டையன் அறை!

Published on 21/08/2017 | Edited on 21/08/2017

ஓபிஎஸ்க்கு செங்கோட்டையன் அறை!


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தலைமைச்செயலகத்தில் செங்கோட்டையன் அறை தரப்பட்டுள்ளது.  

சென்னையில் அதிமுக இரு அணிகள் இணைக்கப்பட்டதை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவர்னர் மாளிகை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.  அதில், ஓ.பன்னீர்செல்வம் (துணை முதல்வர்) - நிதித்துறை, வீட்டு மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை,  மாபா பாண்டியராஜன் - தமிழ் கலாச்சாரத்துறை, தொல்லியல்துறை, உடுமலை ராதாகிருஷ்ணன் - கால்நடைத்துறை. பாலகிருஷ்ணா ரெட்டி - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சி.வி.சண்முகம் கூடுதல் பொறுப்பு - கனிம வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.  இன்று மாலை 4.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைப்பெற்றது.  

இதையடுத்து தலைமைச்செயலகத்திற்கு வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.  அமைச்சர் செங்கோட்டையன் இருந்த அறை ஓபிஎஸ்க்காக தரப்பட்டுள்ளது.  இதற்காக ஓபிஎஸ் வருவதற்கு முன்னதாக, செங்கோட்டையன் அறை காலி செய்யப்பட்டது.   

சார்ந்த செய்திகள்