Published on 12/10/2019 | Edited on 12/10/2019
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்காவில் புதிய பேருந்து நிலையம் அருகே ஆதிதிராவிடர் நலத்துறைக்கான தனி வட்டாச்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களோடு வருகின்றனர். அப்படி வரும் பொது மக்களை சந்தித்து மனுக்கள் வாங்க கூட ஆள்யில்லாமல் இருப்பதும், சில நாட்கள் அந்த அலுலகமே திறக்காமல் மூடி வைத்திருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் அக்டோபர் 11ந்தேதி காலை அக்கம் பக்க கிராமத்தினர் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தனி வட்டாச்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அது திறக்கப்படாமல் இருப்பதை பார்த்து பொதுமக்கள் 50 பேர் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதன்பின் அங்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள். இது தற்காலிக அலுவலகம், இது மூடப்பட்டுவிட்டது, புதியதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு அதிகாரிகள் உள்ளார்கள், அங்கு செல்லுங்கள் எனச்சொல்லி சமாதானம் செய்தனர்.
எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அலுவலகத்தை மாற்றிவிட்டார்கள் எனச்சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுமக்கள் என்றனர். பின்னர் அதிகாரிகள் சமாதானம் செய்ய பொதுமக்கள் கலைந்து சென்றனர்.