தஞ்சையில் போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களை, கூட்டங்களை கலைக்க செய்யப்படும் ஒத்திகை பயிற்சி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில் மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் முன்னிலையில் சனிக்கிழமை காலை நடந்தது.
ஒத்திகையின்போது கூட்டம் அதிகமானால் எப்படி கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது என்ற ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது போலி கண்ணீர் புகை குண்டுகளுக்கு பதிலாக உண்மையான கண்ணீர் புகை குண்டுகள் 4ஐ வீசியதால் கிரிஷா, கவிதா, சுதா உள்ளிட்ட 6 பெண் காவலர்களும், 3 ஆண் காவலர்களும் மயங்கி சரிந்தனர்.
அவர்களை ரகசியாக மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதில் கவிதா இன்னும் மூச்சுத் தினறலால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறாராம். இந்த தகவல் மீடியாக்களுக்கோ எதிர் கட்சிகளுக்கோ தெரியக் கூடாது என்று ரகசியமாக வைத்துள்ளனர்.
இதை அறிந்த தஞ்சை சமூக ஆர்வலர்கள் தஞ்சை மாவட்டத்தில் அடுத்து எந்த போராட்டத்திற்காகவோ ஒத்திகை பார்த்துவிட்டனர். இனி எந்த போராட்டம் நடந்தாலும் துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை தான் போல எச்சரிக்கையாக இருக்கனும் என்கின்றனர்.
செம்பருத்தி, மகி.