Skip to main content

வாழ்வாதாரத்திற்காக 9 லட்சம் இறால் குஞ்சுகள்..!

Published on 04/02/2019 | Edited on 04/02/2019
செ

 

  மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்காக கடலில் சுமார் 9 லட்சம் இறால் குஞ்சுகளை விட்டுள்ளனர் மண்டபத்திலுள்ள மத்திய அரசின் கடல் சார் ஆராய்ச்சி மையத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மத்திய அரசின் கடல்சார் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது இங்கு கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதும் கடல்வளத்தை தற்போதைய நிலை மற்றும் கடல் வளத்தைப் பெருக்குவது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.  இந்நிலையில் ஆராய்ச்சி மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மையத்தை வளர்க்கப்பட்டு வரும் தாய் இறால்களிலிருந்து முட்டைகளை சேகரித்து 45 நாள் பாதுகாத்து பின் அதிலிருந்து பெரிக்கப்பட்ட  குஞ்சுகளை சேகரித்து சிறிது வளர்ந்த நிலையில்  ராமேஸ்வரம் அடுத்துள்ள சங்குமால் கடல் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு 9 லட்சம் விறால் குஞ்சுகளை விஞ்ஞானிகள் கடலில் விட்டனர்.

 

ஆ

 

 கடலில் விடப்பட்ட இறால் குஞ்சுகள் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் 100 முதல் 150 கிராம் எடை வரை வளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானி தெரிவிக்கும்போது மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை பெறுவதற்காகவும் கடலில் உள்ள இறால்களின் உற்பத்தியை பெருக்கி மீனவர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புலவறால் என்று சொல்லக்கூடிய இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்து கடலில் விடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அதன் ஒரு பகுதியாக 2018 2019 ஆம் நிதியாண்டில் முதல் கட்டமாக டிசம்பர் மாதத்தில் 5 லட்சம் பேர் குஞ்சுகள் கடலில் விடப்பட்ட நிலையில், தற்பொழுது ஒன்பது லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்