







Published on 18/10/2023 | Edited on 18/10/2023
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சந்திராயன் மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியினை மேயர் பிரியா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். உடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றனர்.