Published on 18/10/2020 | Edited on 18/10/2020

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறக்க வாய்ப்பு இல்லை. பள்ளிகளைத் திறப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. நீட் தேர்வை இரண்டாவது முறையாக எழுதும் மாணவர்கள், தனியார் பயிற்சி மையங்கள் மூலமாக தான் பயிற்சி பெற முடியும்" என்றார்.