பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளில் வருகை பதிவேடு கட்டாயமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில் "பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளில் வருகை பதிவேடு கட்டாயமில்லை. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவர்களை வற்புறுத்தக்கூடாது. ஆன்லைன் வகுப்புகளில் மதிப்பெண்களை கணக்கிடுவதும் கட்டாயமில்லை. ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு அட்டவணையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கான அட்டவணை, ஆசிரியர்கள் எடுத்த வகுப்பு விவரங்களை பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் குறித்த புகார்களை grienvancesredressaltnpta@gmail.com என்ற மினனஞ்சல் முகவரில் பெற்றோர்கள் தெரிவிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆன்லைன் வகுப்பால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை சம்பவங்கள் நடந்ததால் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.