தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெலமாரணஹள்ளியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் செல்வம் (21). பொக்லின் வாகன ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.

இவர், கடந்த ஞாயிறன்று (பிப். 2) உள்ளூரைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவரை கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் தந்தை மாரண்டஹள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடத்தப்பட் மாணவி, இன்னும் பதினெட்டு வயதை நிறைவு செய்யவில்லை என்றும், அவர் சிறுமி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து செல்வத்தை, செவ்வாய்க்கிழமை (பிப். 4) போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தர்மபுரி கிளைச்சிறையில் அடைத்தனர். மாணவியை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர்.