
தென்காசி மாவட்டம் வினைதீர்த்த நாடார்பட்டி கிராமத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடவசதி இல்லாததால் மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் பகுதியில் அமர வைத்து பாடம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு மாணவர்களுக்கான இட வசதி இல்லாததால் பள்ளிக்காக அமைக்கப்பட்டிருக்கும் சைக்கிள் நிறுத்தும் பகுதியில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாது அந்த பகுதியில் உள்ள இ-சேவை மையத்திலும் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு வருகின்றனர். பள்ளிக்கு அருகிலேயே அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் இருக்கும் நிலையில் அந்த இடத்தினை பள்ளி கூடுதல் கட்டிடத்திற்கு ஒதுக்கி தந்தால் மாணவர்களுக்கு பயனளிக்கும் விதமாக இருக்கும் என பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.