Skip to main content

18 லட்சம் மாணவர்கள் பயன்பெறப் போகும் திட்டம்; ரூ. 500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அறிவிப்பு

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

The scheme will benefit 18 lakh students; 500 crore announced by Tamil Nadu government

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் தாக்கல் செய்கிறார். 

 

2023 -2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில் நிதியமைச்சர் முன்வரிசையில் நின்று படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிதியமைச்சர் தனது உரையைத் துவங்கும் போதே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். எனினும் நிதியமைச்சர் தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்தார். 

 

அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் குறித்து பேசிய அவர், “முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 1,937 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 1,48,315 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட 1,543 தொடக்கப் பள்ளிகளில்  1,319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதில், 624 பள்ளிகளில் 10 சதவீதமும், 462 பள்ளிகளில் 20 சதவீதமும், 193 பள்ளிகளில் 30 சதவீதமும் என மாணவர் வருகை அதிகரித்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் 39 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. தற்போது 2.20 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். 2021-2022 ஆண்டை ஒப்பிடும் போது உயர் கல்வியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்