தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அண்மையில் விழுப்புரம் அருகே உள்ள எல்லீஸ் அணையில் நீர்க்கசிவு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
அதனைத்தொடர்ந்து விழுப்புரம் ஏனாதிமங்கலத்தில் உள்ள எல்லீஸ் அணைக்கட்டு உள்பக்கமாக சேதமுற்ற நிலையில், அதிக அளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அணைக்கட்டின் கதவணைகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணை முழுவதும் சேதமடையும் அபாயம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கருத்தில்கொண்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு ''எல்லீஸ் அணையை காப்பாத்துங்க'' என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் அந்தப்பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதே இந்த சேதத்திற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டையும் விவசாயிகள் வைத்துள்ளனர்.