Skip to main content

சாத்தான்குளம் விசாரணையில் ஈடுபட்ட சி.பி.ஐ. அதிகாரிக்கு கரோனா தொற்று...

Published on 22/07/2020 | Edited on 22/07/2020

 

sathankulam probe cbi officer tested positive for corona

 

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் விசாரணையில் ஈடுபட்ட சி.பி.ஐ. அதிகாரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீஸார் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். அவர்கள் மரணம் அடைய, அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்குள்ளான காவலர்களைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றது. இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து ஆகியோர் இன்று மதுரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படத் திட்டமிடப்பட்ட சூழலில், சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகளில் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரோடு தொடர்பிலிருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது
 

 

சார்ந்த செய்திகள்