Skip to main content

சாத்தான்குளம் வழக்கில் தலைமைக் காவலராக இருந்த தாமஸ்க்கு இடைக்கால ஜாமீன்!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

sathankulam incident former head constable madurai high court order

 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தலைமைக் காவலராக இருந்த தாமஸ் பிரான்சிஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. 

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள, தலைமைக் காவலராக இருந்த, தாமஸ் பிரான்சிஸ், தனது சகோதரருக்கு திருமணம் நடப்பதால், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். 

 

இந்த மனு இன்று (07/01/2021) விசாரணைக்கு வந்த போது மனுவை விசாரித்த நீதிபதிகள், சகோதரர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தாமஸ் பிரான்சிஸ்க்கு ஜனவரி 10-ஆம் தேதி காலை 11.00 மணி முதல், ஜனவரி 12-ஆம் தேதி மாலை 05.00 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதேபோல், இதே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளராக இருந்த ரகு கணேஷின் ஜாமீன் மனு மீதான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

ஏற்கனவே தந்தை மறைவுக்காக கடந்த அக்டோபர் மாதத்தில் 3 நாள் இடைக்கால ஜாமீன் பெற்றிருந்தார் தாமஸ் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்