Skip to main content

சாத்தான்குளம் வழக்கு... நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

 Sathankulam case ... Court orders filing of status report

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்ததையடுத்து தமிழக அரசு இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என தெரிவித்தது. ஆனால் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவினால் உடனடியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் விசாரணையில் இறங்கிய நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. 

தற்போது வரை சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக 5 காவலர்கள் சிறையிலிருந்து சி.பி.ஐ. காவலில் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதனையடுத்து மூன்று காவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சி.பி.ஐ. விசாரணைக் குழுவில் இருந்த 8 அதிகாரிகளில் 7 அதிகாரிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதைக் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பான விசாரணை நிலை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய சி.பி.ஐக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்