







Published on 05/12/2021 | Edited on 05/12/2021
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று (05/12/2021) சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் கண்ணீர் மல்க மரியாதைச் செலுத்தினார் சசிகலா. அதைத் தொடர்ந்து, சசிகலாவின் ஆதரவாளர்கள் சரஸ்வதி உள்ளிட்டோரும் நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினர்.
பின்னர் சசிகலா தலைமையில் அவரது ஆதரவாளர், ஒற்றுமையோடு இணைந்து நம் எதிரிகளை வென்று வீறுநடைப் போட நாம் ஒன்றாக வேண்டும்; கட்சி சென்றாக வேண்டும். விரைவில் அ.தி.மு.க. ஆட்சி அமைய சசிகலா தலைமையில் ஒன்றிணைவோம்; வென்று காட்டுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.