Skip to main content

மருத்துவ மாணவர்கள் உறுதிமொழியில் சமஸ்கிருத சர்ச்சை! 

Published on 01/05/2022 | Edited on 01/05/2022


 

Sanskrit controversy over medical students' pledge!

 

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று (30/04/2022) அக்கல்லூரியில் நடைபெற்றது.

 

மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு வாசித்தனர்.

 

வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்த சமஸ்கிருத வாக்கியங்களை உச்சரித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த ஆங்கில உறுதிமொழி ஏற்பில் சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய உறுதிமொழியும் இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனை கேட்ட அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அப்போதே கல்லூரி முதல்வரிடம் இது குறித்து கேட்டு கோபம் அடைந்துள்ளார். 

 

இது தொடர்பாக, மருத்துவக் கல்வி இயக்குனரகம், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலிடம் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.

 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல், "மருத்துவக் கல்லூரி மாணவர் சங்க பொதுச் செயலாளர், தேசிய மருத்துவ ஆணையத்தில் இணையதளத்தில் இருந்து ஆங்கிலத்தில் இருந்த உறுதிமொழியைப் பதிவிறக்கம் செய்து, அதனை நிகழ்ச்சியில் மாணவர்களிடம் கொடுத்து உறுதிமொழி ஏற்க வைத்தார். சம்பந்தப்பட்ட மாணவர் சங்க பொதுச்செயலாளர் வேண்டும் என்றே இதனை செய்யவில்லை. தவறுதலாக இதனை பதிவிறக்கம் செய்து கொடுத்துள்ளார்" என்றார். 

 

சார்ந்த செய்திகள்