Skip to main content

நாயைக் கொன்ற சந்தன மரக் கொள்ளையர்கள்!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

coimbatore

 

 

கோவை, பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன். விவசாயியான இவர் நிலத்தில் சந்தன மரம் ஒன்று 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது.

 

அவர் கூண்டிலில் தோட்டத்து காவலுக்காக இரண்டு நாய்களை வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் தோட்டத்துக்குள் நுழைந்துவிட்டனர். உடனே நாய்கள் குரைக்க ஆரம்பித்து விட்டன. 

 

உடனே அவர்கள் இரண்டு நாய்களுக்கும் விஷம் தேய்த்த பிஸ்கட்டுகளை போட்டிருக்கின்றனர். தின்ற நாய்கள் மயக்கமாகிவிட்டன.  உடனே அந்த சந்தன மரத்தை வெட்டி கடத்தி விட்டனர். காலையில் தோட்டத்துக்கு வந்த குருநாதன், சந்தன மரம் வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ந்தார். 

 

பின்னர் இரண்டு நாய்களில் ஒரு நாய் இறந்து கிடக்க. இன்னொரு நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டவர் அதிர்ச்சியாகி விட்டார். பின்னர் ஆஸ்பத்திரிக்கு நாயை கொண்டு சென்றார்.

 

பின்னர் காவலுக்கிருந்த சரவணகுமார் தனக்கு மரம் திருட்டுப் போனதைப் பற்றி தெரியாது என்றார். பின்னர் பேரூர் போலீசில் புகார் தரப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணையில் இறங்கி இருக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்