காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பாலாற்றில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 25க்கும் மேற்ப்பட்டோர் இரவு முழுவதும் திருட்டுதனமாக மணல் அள்ளுவது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலாறு பாலத்தின் துண்களின் கீழே அளவிற்கு அதிகமாக மணல் அள்ளியதால் பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இந்த திருட்டு சம்பவம் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் அனுமதியுடன் நடைபெறுவதாக சமுக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதுமாக கடந்த நான்கு ஆண்டுகளாக மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மணல் தட்டுபாடு அதிகமாக உள்ள நிலையில் இரவு நேரங்களில் செவிலிமேடு பகுதியை சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்ட திருடர்கள் மணலை மூட்டை மூட்டையாக கட்டி இருசக்கரம், மினி லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் திருடி செல்வது வழக்கமாக உள்ளது.
இப்படி திருடிச்செல்லும் ஒரு மணல் மூட்டை சுமார் ரூ.150 முதல் 300 வரை விற்கப்படுதாக தெரிகிறது. இதனால் ஒரு நாள் மட்டும் ரூ.2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை மணல் மூடைகளை விற்பனை செய்யப்படுகிறது.
பாலாற்றின் குறுக்கே கடந்த 2011ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் தூண்களின் கீழே அடியில் உள்ள கான்கிரீட் தெரியும் அளவிற்கு மணலை திருட்டுதனமாக அள்ளியதால் பாலம் சற்று பலவீனமாக இருக்கின்றது.
இந்த மணல் திருட்டை கட்டுபடுத்த மாவட்ட கண்கானிப்பளார் தனிப்படை அமைத்தாலும் அவரின் கீழ் பணியாற்றும் காவலர்கள் மணல் கொள்ளைக்கு உறுதுணையாக இருப்பதால் இக்கொள்ளையை தடுக்கமுடியாமல் இருக்கிறது.
இதனை கட்டுப்படுத்த இரவு முழுவதும் அதிகளவிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இக்கொள்ளையர்களை பிடித்து மணல் கொள்ளையை தடுக்கவேண்டும் என சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.