Published on 09/12/2019 | Edited on 09/12/2019
சேலம் அழகாபுரம் பெரிய புதூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் சரவணன் (24). பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இவரை சமீபத்தில் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிகர் உத்தரவிட்டார். அதன்படி, சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், அதற்கான ஆணையை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் நேரில் சார்வு செய்தனர்.