Skip to main content

மேட்டூர் அணையில் டெல்டா பாசன நீர் திறப்பு அதிகரிப்பு!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

salem district, mettru dam water level

 

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 

இன்று (18/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,458 கனஅடியில் இருந்து 13,001 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.35 அடியாகவும், நீர்இருப்பு 54.20 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்கான நீர்திறப்பு 15,000 லிருந்து 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

 

இதனிடையே, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக குறைந்தது.

 

 

சார்ந்த செய்திகள்