சேலம் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி, 11 வட்டாட்சியர்கள் நிலையிலான அதிகாரிகளைத் திடீரென்று இடமாற்றம் செய்து ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்ட வருவாய் அலகில், மாவட்ட வழங்கல் துறை பறக்கும்படை சிறப்பு வட்டாட்சியராக இருந்த அழகிரிசாமி, சேலம் மேற்கு சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் வட்ட வழங்கல் அலுவலர் குமரன், ஆட்சியர் அலுவலக சிரஸ்தார் (நீதியியல்) பிரிவுக்கும், அங்கிருந்த சண்முகவள்ளி சந்தியூர் ஆட்டையாம்பட்டி கலால் மேற்பார்வை அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆத்தூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக இருந்த அன்புச்செழியன், ஆத்தூர் வட்டாட்சியராகவும், அங்கிருந்த பிரகாஷ், சேலம் வட்ட வழங்கல் அலுவலராகவும் மாற்றப்பட்டனர்.
சேலம் மேற்கு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக இருந்த சபியுன்னிஸா, ஆத்தூர் நில எடுப்புப்பிரிவு (என்.ஹெச். 68) வட்டாட்சியராக மாற்றப்பட்டார். ஆத்தூர் சிறப்பு வட்டாட்சியர் ஜெயந்தி, ஆத்தூர் சமூக பாதுகாப்புத் திட்ட சிறப்பு வட்டாட்சியராகவும், அங்கிருந்த ஜெயவேலு, ஆத்தூர் சிறப்பு வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டனர்.
மேலும், ஆத்தூர் முத்திரைத்தாள் சிறப்பு வட்டாட்சியரான கோவிந்தராஜன், ஆத்தூர் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டார். மேட்டூர் சிறப்பு வட்டாட்சியர் வாசுகி, சேலம் தெற்கு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும், அங்கிருந்த சித்ரா, ஆத்தூர் முத்திரைத்தாள் சிறப்பு வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.