சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அதிக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள், வேலைக்கு செல்வோர் , வியாபாரிகள் என அனைவரும் சாலையோரம் உள்ள இளநீர் கடைகள் மற்றும் தர்பூசணி கடைகள், பழச்சாறு கடைகள் நாடி தங்கள் உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கின்றனர். இதனால் கோடை காலத்திற்கு முன்பாகவே வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி மற்றும் இளநீர் வியாபாரம் ஜோராக நடந்து வருகிறது.
முந்தைய வருடம் பிப்ரவரி மாதம் மிகுந்த குளிர்ந்த நிலையாக காணப்பட்ட நிலையில் தற்போது கத்தரிவெயில் சுட்டெரிப்பது பருவநிலை மாற்றத்தை அனைவராலும் காண மற்றும் உணர முடிகிறது என சமூக சூற்றுச்சூழல் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல், மரங்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்றவற்றால் மட்டுமே பருவநிலை மாற்றத்தை தடுக்கலாம் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
B.சந்தோஷ் , சேலம் .