Skip to main content

காவியும் காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறல் - உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

 

ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது பூதாகரமாகி வரும் சூழலில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று நேரில் சென்றனர். அதன்படி அவர்கள் தங்களது வாகனத்தில் ஹத்ராஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது போலீஸார் அவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலை வழியாக நடந்தே செல்வதாக முடிவெடுத்து தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டனர். 

 

இந்நிலையில், நடந்து செல்லும் ராகுல் காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்த முற்பட்டதோடு, அவரை தாக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடைப்பயணம் மேற்கொண்டிருந்த அவரை உத்தரப்பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். அரசு உத்தரவை மீறியதற்காக ஐ.பி.சி.யின் 188 சட்டப்பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ராகுல் காந்தியின் கைதுக்கு தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், "உ.பி காவல்துறை ராகுலை தடுத்து தள்ளிவிட்டது மிகப்பெரிய அராஜகம். காவியும் காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறலை ஜனநாயக சக்திகள் கண்டிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்